Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 AUG 1951
இறப்பு 30 JUL 2013
அமரர் ஸ்ரீஹர ஈஸ்வரி லம்பேர்ட்
வயது 61
அமரர் ஸ்ரீஹர ஈஸ்வரி லம்பேர்ட் 1951 - 2013 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்போர்னை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி ஸ்ரீஹர லம்பேர்ட் அவர்கள் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

தலைநகர் ஈன்று புறந்தந்த
வலம்புரியின் முத்து நீ அம்மா!
 விலைமதிப்பற்ற திறன்கள் படைத்த
எம் எழில் சொத்து நீ அம்மா!
 அலை தாண்டிச் சென்று எம்மை
ஆலவிருட்சமாக்கிய வித்து நீ அம்மா!
 மலையாய் உயர்ந்து நின்று எம்மில்
அறம் வளர்த்த சம்பத்து நீ அம்மா!

வீரம் நிறை தொபியாஸ் பரம்பரைக்
குருதியில் கலந்த சித்தம்மா!
ஈரம் குறையா இரக்க சிந்தையில்
என்றும் சிறந்த முத்தம்மா!
 தாரமாய் வந்து எம் பாரம் தாங்கிய
பத்தரை மாற்றுத் தங்கம்மா!
ஓரமாய் குந்தி நின்று பத்தாண்டுகளாய்
கண்ணீர் வடிக்க நாம் செய்த பாவம் ஏதம்மா?

கொடிய நோய் உன் அழகில்
மயங்கி பதுங்கி வந்ததே!
படியளக்கும் பரமன் அருளுமே
உன் விதி கண்டு ஒதுங்கி நின்றதே!
மடி சுமந்த உன் மழலைகள் பரிதவிப்பர் என்ற போதும்
அவன் விழி பிதுங்கி நின்றதே!
இடி விழுந்த பனைமரமாய் எம் வாழ்வு ஒடிந்து வீழ்ந்ததே!

பத்து ஆண்டுகள் கரைந்தாலும் உன் உடனிருப்பை
எம்மில் என்றும் உணர்கின்றோம்!
 சத்தம் இன்றி நீ பொழியும் முத்தங்களை
தினம் கரும்பாக உண்கின்றோம்!
சித்தம் கொண்டு உன்னை அழைத்த இறைவன்
பதம் நீ அமர்ந்திருப்பதை உணர்கின்றோம்!
 கத்தும் எம் இதயங்களை ஆற்றிட
ஆண்டவனை வேண்டுவதை உணர்கின்றோம்!

''அமைதியில் நீ அமர்ந்து எம் அமைதிக்காய் வேண்டிடுவாய்!"

அமைதி! அமைதி! அமைதி!

பிரிவில் வாடும்
கணவன், பிள்ளைகள், உறவுகள்

தகவல்: றோய் லம்பேர்ட்(கணவர்)

Photos

No Photos

Notices