யாழ். இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏரம்பு இரத்தினவடிவேல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள ஐயாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் ஐயா!
நீங்கள் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!
காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது ஐயா!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் ஐயா!
ஆலமரத்தின் அடி அறுந்து ஆண்டைந்து ஆனதையா!!!
கணீரென்ற உங்கள் குரல் காதினில் இப்போதும் ஒலிக்குதையா!!!
தேசத்தை காதலித்த தேசப்பற்றாளனே!
நேசமுடன் எமையணைக்கும் அன்புறவாளனே!!!
நீயில்லா இந்த ஏகாந்த பெருவெளி வெறுமையாய்
விரிந்தே கிடக்குதையா!!!
ஆசையாய் உமை அணைக்க ஒருமுறை
ஓடோடி வாருமையா!!
தினம்தோறும் உங்கள் திருமுகம் காண ஏங்கித்தவிக்கும்
மனைவி, பிள்ளைகள்...!
அன்னாரின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 24-08-2024 சனிக்கிழமை அன்று நடைபெறும் அதனைத்தொடர்ந்து மதியபோசன நிகழ்விலும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.