
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகர் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட எம்பெருமான் குமரவேள் அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், எம்பெருமான் தவபுத்திரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி(அதிபர்- சிலாவத்தை மகா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
அருட்செல்வி(பிரதேச செயலகம்- கரைச்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
அக்சயா(கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலயம்), டர்னியா(ஆதவன் முன்பள்ளி), அகர்ணியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சினி, விஜயபாலா(சுவிஸ்), பெளசிகா(ஆசிரியை- சுந்தரபுரம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஸ்கரன்(ஆசிரியர்- முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம்), கிறீஸ் ரீனா(சுவிஸ்), குகதர்சன்(மின்சாரசபை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கரிவேணன், ஆரதி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
லேபிரதித், திக்சிகா, தக்ஷித், ரோகித் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
மரண செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைகிறோம். அவரை இழந்து தவிக்கும் செல்விக்கும், குழந்தை களுக்கும் எமது அனுதாபங்களையும், ஆறுதல் களையும் தெரிவித்து கொள்கிறோம்