பீ ஈ எஸ் ராஜ்குமார் புன்னகையோடு வலம்வந்த நண்பன் புன்னகையோடு வாழ்ந்தவன் புன்னகையோடு என்றும் நினைவில் நிற்பவன் பல வருடங்கள் பழகி , பவித்திரமான நினைவுகளை நினைவில் விதைத்தவன், வாழ்க்கையில் என்றும் வாழ்ந்து முயன்று வாழ்வோடு கலந்தவன், பள்ளிப்பருவத்தில் பாடத்தை இவன் படித்ததிலும் இவனிடம் பாடம் படித்த பாடங்களே அதிகம், இயல்பான நட்பும் இனிமையான குணமும் என்றும் இவன் இயல்பு, பாரிஸ் நகரில் இவனோடு சேர்ந்து சுற்றிய நாட்களில் ராஜ்குமார் என்னிடம் காட்டிய அன்பு மேல் அதனிலும் அவன் காட்டிய கரிசனையோ அதை விட மேல், வாழ்க்கையின் அடித்தளத்தில் நின்றும் புன்னகைக்கலாம் புரிதலை வளர்க்கலாம் என்று வார்த்தைகளின்றி வாழ்க்கையால் உணர்த்திய வித்தகன், நீண்ட நாட்களின் பின்னர் 2021 இல் மீண்டும் தொடர்பு கொண்டபோது மாறாத நட்பின் தோரணை வேராக நினைவில் நின்று மீண்டும் துளிர்த்தது, நண்பா ராஜ்குமார் எங்கள் நினைவுகளில் நீ என்றும் வாழ்கிறாய் புன்னகையோடு வலம் வருகிறாய், உனது ஆன்மா ஆண்டவன் சந்நிதியில் புன்னகையோடு இளைப்பாறும், ஓம் சாந்தி சாந்தி சாந்தி ! -கண்ணீருடன் ரவி அமிர்தன்
In my heart, you will forever be linked with my favourite and adorable Aunty’s house. There is a hole in your family where you used to be. You were the beautiful melody in the rhythm of all your...