10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இம்மானுவேல் செபஸ்தியாம்பிள்ளை
(சின்னத்தம்பி)
வயது 87
அமரர் இம்மானுவேல் செபஸ்தியாம்பிள்ளை
1928 -
2015
சில்லாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இம்மானுவேல் செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
பத்து ஆண்டு ஆனாலும் அப்பா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
பத்து ஆண்டு என்ன பத்தாயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I still miss you every day Appa. I feel like you are still with me and watching over me every day. There will never be a day that I don't think of you. Logini