காதோரம் கேட்ட செய்தி பொய்யாகாதோ..... காலங்கள் நாற்பது உங்களோடு எனக்கிருந்த நட்பு......! கனவிலும் நினைக்கவில்லை நீங்கள் இவ்வளவு விரைவாக காலனிடம் சென்றிடுவீர் என்று... நம்பமுடியவில்லையே........ நம் வாழ்வின் இன்பதுன்பங்கள்அனைத்திலும் நல்மனத்தோடு கலந்துகொள்வீரே... இடம்பெயர்ந்து யாழ்வந்தபோதும் யாழ்விட்டு இடம்பெயர்ந்த போதும் இருப்பிடம் தொட்டு......... என்தொழிலுக்கும் துணையாக நின்றீர்களே........! நன்மை தீமைகதைத்து நாலுபேருக்கும் நல்லதை எடுத்துச் சொல்வீரே.........! நிதானம் கொண்டு தொழிற்றுறையில் நீண்ட காலம் என்னோடு பயணித்தீரே..........! உங்கள் பிள்ளைகளின் உயர்வை எண்ணி உள்ளம் திறந்து கதைப்பீரே......! என் ராஜுவின் இழப்பின்போதும் என்சோகம்தாங்கியதோளானீர்கள்! என்பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் இலங்கைஅண்ணை என்றால் கொள்ளைப்பிரியம்..... எத்தனையோவழிகளிலும் எங்கள் வாழ்வில் இரண்டறக்கலந்தீர் நீங்கள்...... உங்கள் மோட்டார் வாகன ஒலி தெருவிற்குள் நுழைந்தாலே போதும் நானும் மனைவி மக்களும் உங்கள் வரவைஆவலோடு எதிர்பார்ப்போமே..........! கனடா சென்றும்ஊரையும் உறவுகளையும் அதிகம்நேசித்தீர்களே....... உங்கள் அம்மா தங்கை உறவுகளின் அத்தனை காரியங்களிலும் பங்கெடுத்தீரே........! சிறிது நாட்களின் முன்என்னோடும் இங்குள்ள உறவோடும் கதைத்து மகிழ்ந்தீரே........! சீக்கிரமே இப்பூவுலகை விட்டு நீங்கி விடத்தானோ.........! இனி ஒரு நண்பன் உமைப்போல் எனக்கு வருமோ........! இப்பூமியிலே யாரும் நிலையில்லைத்தான்....... என்றாலும் என்மனது ஏற்கமறுக்கிறது.......! அந்த கள்ளச் சிரிப்போடு கனடாவிலிருந்து நீர்வருவீரென்று என்மனம் காத்திருந்தாலும்........ உங்கள் ஆத்மா பத்திரகாளி அம்மனடி சேர நானும் இறைவனைத் தொழுகின்றேன்......! வி. வல்லிபுரநாதனும் பிள்ளைகளும்.