Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 AUG 1951
மறைவு 06 JUL 2014
அமரர் இளையதம்பி தனபாலசிங்கம்
வயது 62
அமரர் இளையதம்பி தனபாலசிங்கம் 1951 - 2014 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி தனபாலசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!
 நொடிப் பொழுதில் எமை நோகவிட்டு சென்று விட்டீர்கள்!

ஆண்டு பதினொன்று ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
 எம் கண்களில் ஈரம் நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை அப்பா!

கணப் பொழுதும் எண்ணவில்லை எம் கலங்கரை விளக்கே!
 வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
 எங்கள் விழிகள் சிந்திடும் துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ....

ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை விட்டு
மறையுமா மறக்குமா...

என்னை இந்த மண் உலகில்
 விற்றிட்ட எம் மகானே
நான் வளர்ந்த போது பகிர
 என்னிடம் நிறைய இன்ப துன்பங்கள்
ஆனால் விதியின் விளையாட்டால்
உங்கள் நிழல்படத்துடன் பகிர்ந்து விட்டு
தூங்கின்றேன் ஒவ்வொரு இரவுகளும்
இன்றும் உருவம் இல்லாமல்
எம்முடன் வாழும் உங்கள் ஆத்மாவுக்கு
எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வருப்பராக
இது உங்களின் இளையவனின் பிரார்த்தனை
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute