1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயாத்துரை கந்தசாமி
(சந்திரன்)
வயது 57
அமரர் ஐயாத்துரை கந்தசாமி
1963 -
2021
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானை தபால்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duren ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்