Clicky

Born 09 DEC 1932
Rest 01 OCT 2026
Mr Edward Cyril Manuelpillai (Eric)
Retired administrator at Hartley college Ponit Pedro and Osmaniya College Jaffna.
Age 93
Mr Edward Cyril Manuelpillai 1932 - 2026 Mullaitivu, Sri Lanka Sri Lanka

Tribute

ரவி. அமிர்தவாசகம் 04 OCT 2026 Canada

அமைதியின் முகவரி - எரிக் மானுவேல்பிள்ளை அவர்களுக்கு ஒரு கவிதாஞ்சலி *கொய்யாதோட்டம் அழுகிறது இன்று* *தன் அன்பு மகனை இழந்து!* சிறு வயது முதல் நான் கண்ட முகம், சிரிப்பில் அமைதி தந்த முகம், அக்கம் பக்கம் என்றில்லை - அனைவருக்கும் அண்ணனாய், தந்தையாய் வாழ்ந்த முகம். அண்டை வீட்டுக்காரர் அல்ல நீர், என் பால்யத்தின் வழிகாட்டி நீர், என் உயிர் நண்பர்கள் ஜோ, தயா இருவரையும் தந்த புண்ணிய தந்தை நீர்! சமூகத்திற்காய் குரல் கொடுத்தீர், சத்தமின்றி நீதிக்காய் போராடினீர், சண்டையில்லை, சச்சரவில்லை - உம் வாழ்வே ஒரு சமாதான பாடம். அமைதியை நேசித்த மனிதர் நீர், அமைதியை விதைத்த விவசாயி நீர், இன்று நீர் இல்லை என்றதும் கொய்யாதோட்டமே வெறிச்சோடி நிற்கிறது. உங்கள் புன்னகை மறையாது, உங்கள் வார்த்தைகள் அழியாது, நீங்கள் விட்டுச் சென்ற அன்பும் அமைதியும் எங்கள் நெஞ்சில் என்றும் வாழும். *அன்பின் உருவமே,* *சமாதான புறாவே,* *எங்கள் எரிக் அங்கிளே,* *உம் ஆத்மா சாந்தியடையட்டும்!* உங்களை இழந்து வாடும், *கவிப்புயல் ரவி அமிர்தன் & கொய்யாதோட்டம்* ❤️ 🙏