யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் றெஜீனா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
நாட்கள் முப்பத்து ஒன்று கடந்ததுவே
உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து
ஓர் திங்கள் ஆனதே மம்மி!
இரவெல்லாம் விழித்திருந்து
எமக்காய் மெழுகுவர்த்தியாய் உருகி
உங்கள் உறக்கம் துறந்தீரே
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது மம்மி!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
நீங்கள் இல்லாமல்
அநாதையாய் தவிக்கின்றோம்…மம்மி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
எங்களின் மம்மியின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.