Clicky

பிறப்பு 19 MAY 1939
இறப்பு 25 OCT 2020
அமரர் ஈஸ்வரி கந்தசாமி 1939 - 2020 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கேதாரகௌரி விரதமின்று கேட்டசெய்தி பொய்யோ...? அன்பின் இருப்பிடம் அணைந்ததும் மெய்யோ.....? ஆவரங்கால் ஈன்றமகள் ஆண்டவன் அடி சேர்ந்ததுவோ...? மகளாய் மருமகளாய் மனைவியாய்..... தாயாய்... பாட்டியாய் உம் பணியது உயர்வானது! என்றுமே சோர்வில்லை பிள்ளைகள் உயர்வே _அவர் வாழ்கையின் எல்லை.....! வீடுவரும் போதெல்லாம் விருந்துபசாரம் செய்து விருப்போடு கதைத்து அலாதியான அன்பை அள்ளியிறைப்பீரே...... வேப்பம்பூவெடுத்து வடகம் செய்வதும் பருத்தித்துறை வடை பாங்காய் சுடுவதும் உங்கள் கைவந்தகலை! அன்ரி! விரதம் பலவிருந்து விடியக்கண் விழித்து துளசிமரம் சுற்றி தூயவெண்ணீறு பூசி நீங்கள் வந்த காட்சி இன்றும் என் கண்முன்னே...... மறக்கமுடியாத மனிதர் நீங்கள்...! உங்கள் ஆத்மாசாந்திஅடைய இறையடி தொழுகின்றேன். ?
Write Tribute