மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷித் ஜோன்தாசன் அவர்களின் 31ம் நாள் நினைவு திருப்பலியும், நன்றி நவிலலும்.
கடமைகளைக் கண்ணாக கருதி
வாழ்ந்தீர்கள் கண்களை இமை காப்பது
போல எம்மைக் காத்து வந்தீர்கள்
கணப்பொழுதில் எம்மைப் பிரிந்து
எம்மையெல்லாம் சோகத்தில்
ஆழ்த்தினீர்கள் காலன் உங்களை
அணுகாமல் காக்கும் சக்தியின்றிக்
காலமெல்லாம் கலங்குகின்றோம்
காத்திருக்க்கின்றோம் விழிகளில் நீர்வடிய
வருவாயா எமைத் தேடி?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 28-12-2024 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு வெள்ளவத்தை, St. Lawrence ஆலயத்தில், ஒப்புக்கொடுக்கப்படும் இரங்கல் திருப்பலியில் பங்குபெற்றுவதுடன், பின்னர் ஆலய மண்டபத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
May His Soul Rest In Peace