யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.நாகமுத்து சின்னத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இறையடி சேர்ந்து 31 நாட்கள்
நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்
எங்கள் குடும்பத்தலைவன்!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...
பாசமிகு தந்தையாய் பண்புள்ள
அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும்
உங்கள் நினைவால்
சொந்தம்
அழுது உருகுதப்பா...
ஏழேழு ஜென்மம் சென்றாலும்
உங்களின்
எண்ணங்களும் செயல்களும்
எங்களுடனே
பயணிக்கும் அப்பா
நீங்கள் எமைவிட்டுச் சென்றாலும்
மறையவில்லை உங்கள் காற்தடங்கள்
நாட்கள் பலகோடி கடந்தாலும்
மாறாது எம் நினைவுகள்….!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாளும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 08-11-2025 சனிக்கிழமை மு.ப 06:00 மணியளவில் "கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து 10-11-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இராமநாதன் வீதி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறும்ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நன்றி
The 31st Remembrance & Anthiyetti Ceremony will be held on Saturday, 08 November 2025, at around 6:00AM at the Keerimalai punitha thirthakarai
Subsequent home rituals will take place at the family residence.
In continuation, a Soul Peace Prayer (Ātma Shanti Prārthanai) will be held on Monday, 10 November 2025, at around 11:00AM at the Saraswathi Mandapam, Ramanathan Road. after that lunch will follow the prayer ceremony.
We, the family members, kindly request your esteemed presence
to join us in prayers and Lunch.
With heartfelt gratitude,
The Family.
வீட்டு முகவரி:
கே.கே.எஸ் வீதி,
கொக்குவில் மேற்கு.
கொக்குவில்,
Deeply saddened by the passing of Mr. Dr. Nagamuthu Sinnathamby, a true gentleman from Madduvill North. He will always be remembered for his kind nature, courage, punctuality, and strong willpower...