யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோஸ்காந்தன் கார்த்திகேசு அவர்கள் 21-12-2019 சனிக்கிழமை அன்று பிரித்தானியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அழகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், ராஜநாயகம் லஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
லக்சன், சுவீற்றி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சன், மனோசாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசசோதி, காலஞ்சென்றவர்களான கெங்காதரன், வசந்தாதேவி மற்றும் சாந்தாதேவி, பாலகாந்தன், பிறேமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தண்டாயுதபாணி, சறோஜா, காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.