Clicky

பிறப்பு 18 AUG 1959
இறப்பு 22 APR 2019
அமரர் கலாநிதி C.c. அமிர்தாஞ்சலி சிவபாலன்
வயது 59
அமரர் கலாநிதி C.c. அமிர்தாஞ்சலி சிவபாலன் 1959 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 29 APR 2019 United States

அண்ணாவை மணம்முடித்து அற்புதமாய் வாழ்ந்திருந்து மண்ணோடு மறைவதற்கு மார்க்கத்தைத் தேடியதேன் எண்ணியே பார்க்கிறேன் எதற்கிந்த அவசரமோ கண்ணியமாய் வாழ்ந்ததினிக் காணுமென எண்ணித்தானோ அண்ணியாக இருந்தாலும் அன்னையாக அன்புகாட்டி அண்ணனின் சகோதரர்கள் அனைவரிலும் பாசம்காட்டி நுண்ணியமாய் சமயங்களை நுட்பமாகக் கையாண்டு கண்ணீர்விட்டு நாம்கதற கார்த்தரிடம் ஓடியதேனோ? கண்மணிகள் இரண்டினை கண்டிப்பாக வளர்த்தெடுத்து நண்பியாக பழகிவந்து நல்லாசிரியராக கல்வியூட்டி உண்பதற்கு உணவுவகை உன்னதமாய் செய்துதந்து எண்ணிய கருமமெல்லாம் முடிந்ததென்று மறைந்தீரோ பல்கலையில் கற்பித்தலை பக்குவமாய் செய்துவந்து நல்லபெயர் பெற்றெடுத்து நன்றாக வாழ்ந்திருந்து சொல்ல வேண்டியதை சொல்லிவிட தயங்காமல் வல்லமையாய் வாழ்ந்திருந்து வானுலகம் புகுந்ததேனோ? கொட்டிய குண்டுகள் கொடுத்ததுயர் மறந்திருந்து கட்டிய வீட்டினைமீண்டும் கண்முன்னே மீளமைத்து வீட்டுக்கு யார்வந்தாலும் விருந்தளித்து மகிழ்ந்திருந்து நாட்டுக்கு செய்தசேவை நினைவினிலே நிற்கின்றதே நெற்றியிலே குங்குமம் நேர்மையினைக் குறித்துநிற்க வற்றிடாத அன்பினால் வாழ்க்கையினை அலங்கரித்து வெற்றியாக வாழ்ந்திருந்து வேறுலகம் சென்றதேனே ஒற்றைக் கேள்வியிது ஓயாமல்இங்கு ஒலிக்கிறதே கர்த்தரே அண்ணியை கவர்ந்திழுத்து சென்றதெங்கே அர்த்தங்கள் புரியவில்லை அழைப்பதற்கு அவசரமேன் தேவனே அழைக்கின்றோம் தேடிநீரும் வந்திடுவீர் தேவையெல்லாம் தீர்த்திடுவோம் தாருமெங்கள் அண்ணியினை நித்தம்நித்தம் அழுதும் நீத்தவர்கள் வருவதில்லை சித்தத்தில் ஏற்றுக்கொண்டு சிறுவாழ்வை உணர்ந்துகொண்டு மொத்தமாக நம்வாழ்வை மேன்மையுற வாழ்வதுவே சுத்தமென உணர்ந்துவிட்டால் சுகம்நமக்கு கிடைத்திடுமே அண்ணியின் ஆத்மா சாந்தியடைவதாக அன்புடன் யோகன்