யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். 234 பிரதான வீதியை வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி திருமதி சிசீலியா கார்மலீன் அமிர்தாஞ்சலி சிவபாலன் அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மாகிறற் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கலாநிதி நாகலிங்கம் சிவபாலன்(சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயனத் துறை, யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநித்திலன்(சிரேஷ்ட விரிவுரையாளர், NSBM கிறீன் பல்கலைக்கழகம், ஹோமாகம), சுமித்திரேயி(கொழும்பு பல்கலைக்கழக மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருள்தந்தை ஜெராட் சவரிமுத்து(யாழ். மறைமாவட்டம்), கலாநிதி தர்மன் சவரிமுத்து(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஆன்ம சாந்தி வேண்டியதான திருப்பலி யாழ். புனித அடைக்கலமாதா ஆலயத்தில் 24-04-2019 புதன்கிழமை அன்று 03:00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டபின், புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
please accept my deepest condolences.