யாழ். குருநகர் 16 இராயேந்திரா றோட்டைப் பிறப்பிடமாகவும். பிரான்ஸ் Saint-Denis ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த டோமினிக் டொனால்ட் எட்மன்ட் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் ஆருயிர்த் தெய்வமே
என் அன்பார்ந்த உத்தமரே
எங்கள் அகல் விளக்கு அணைந்ததென்ன
உங்கள் பூமுகம் எங்கே
உங்கள் புன்சிரிப்பெங்கே
எங்கள் அழியாச் சொத்து
அலைமோதிப் போனதென்ன
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றேன்!
எங்கள் அன்புச் செல்வமே
பாசமுள்ள அப்பாவே
எங்கள் அருகிருந்து
எமை வளர்த்து ஆளாக்கி
கல்வி பயில வைத்து
கடைத்தேறும் வேளைதனில்
எம் கடமை செய்யும் முன்னே
எமை விட்டுப் பிரிந்ததென்ன
பெற்றவரை இழந்திங்கு
பெரும்பாவி ஆகிவிட்டோம்!
ஆற்றாது கண்ணீர்
அழுது புலம்புகின்றோம்
ஓராண்டு மறைந்தாலும்
பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம்
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை
மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!!