கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டிவாகர் பிறேம்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுப்போல் இருக்கிறது
ஓராண்டு ஆகிறது
உன்னை நாம் இழந்து
கனவுபோல் உள்ளதையா
அழகான உன் சிரிப்பு
கண்முன்னே நிற்கிறதே
மாமி என்றழைக்கும
உன் மென் குரலோ
காதோரம் வந்து
பல கதைகள் சொல்லுதப்பு
மௌனித்து நிற்கின்றோம்
மனம் தவித்து வெம்புகிறோம்
உனக்கு என்ன நடந்ததப்பு
உன் உணர்ச்சிதனை கொன்றவர்
யாரென்று சொல் கண்ணா
அம்மா அப்பா உடன்பிறப்பு
நீயின்றி நடைப்பிணமாய்
வாழ்வதை பார்க்கா முடியலையே
காலம்தான் அவர்கள்
கண்ணீரைத் துடைக்க வேண்டும்
உன் நினைவுகளை சுமந்தபடி
காலமதைக் கடத்திச் செல்லும்
அவர்கள் வேதனையை யாரறிவார்
விதி என்று சொல்லவா
சதி என்று சொல்லவா
சடுதியாய் சென்றுவிட்டாய்
இம்மண்ணுலகின் சுமைகள்
இனியில்லை உனக்கு
விண்ணுலகில் உன் ஆத்மா
இழைப்பாற வேண்டி
இறையருளை வேண்டுகிறோம்
அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் கவர்ந்தாய்
உறவுகள் உவகை கொள்ள
உழைப்பாலே உயர்ந்து நின்றாய்
கல்விதனை கற்றாய்
கண்ணியமாய் வாழ்ந்தாய்
நட்பிற்கு இலக்கணமாய்
நாணயமாய் வாழ்ந்திருந்தாய்
உன் எழிலான தோற்றம்
அனைவரையும் கவர்ந்து கொள்ள
கம்பீரமாய வலம் வந்தாய்
உனக்குள்ளும் போராட்டம்
இருந்ததென்று நாமறியோம்
முகத்தில் சோர்வுதனை கண்டதில்லை
சோகத்தையும் கண்டதில்லை
என்ன மாயையோ
புரியாமல் நாமும்
புலம்புகிறோம் உனை நினைந்து
வாடா முகத்தழகா
வடிவான கண்ணழகா
முத்துப் பல்லழகா
உனை நாம் முற்றாக இழந்துவிட்டோம்
சும்மா இருக்க மாட்டாய்
சுறுசுறுப்பாய் வேலை செய்வாய்
உனக்குத் தெரியாத வேலையுண்டோ
பார்த்துப் பார்த்து செதுக்கிச் செதுக்கி
கட்டிய மாழிகையில் நீ
கனகாலம் வாழவில்லை
நினைக்க நெஞ்சம் கொதிக்கிறது
உன் கைவண்ணம் பதிந்த
கல்லறையாய் கிடக்கிறதே உன் வீடு
இவ்வளவு சீக்கிரமாய்
சென்றுவிடுவாய் என்று தெரிந்துதானோ
எல்லாமே சாதித்தாய்
வியப்பாக இருக்குதையா
எமை பரிதவிக்கவிட்டு
பாதியிலே சென்றுவிட்டாய்
உன் உடலது மறைந்தாலும்
நீ எம் உள்ளங்களில்
என்றென்றும் வாழ்கின்றாய்
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our Deepest Condolences by Premadas Family from Australia
Please accept our deepest condolences 💐 and prayers. There is no words to say; but keep you all in our prayers. God will comforts you all and keep you and add you all peace. Amen