விஸ் Yverdon-les-Bains ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டிலக்ஸ்சாந் வில்வராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நீ இல்லையெனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா கண்களில்
திரண்டிடும் நீர் கரைத்திடுமோ காயத்தை
நீங்காத உன் நினைவுகள் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உனது தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே இன்முகம் காட்டி
எம் இல்லம் சுற்றிய நாட்களை
எப்படி மறப்போமடா!
அருகினிலே இனிமையாய் நிஜமாய்
கண் உன் உருவத்தை
நிழற்படமாய் பார்க்கும்போது நெஞ்சம்
விம்மி அழுகின்றதே மகனே
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
பலநூறு உறவுகள் இருந்தென்ன
நீ பிரித்த இடைவெளியை மகனே
யார்தான் நிரப்புவாரோ
கடலின் ஆழத்தை கூடக் கண்டு விடலாம்- ஆனால்
நாம் உன்மேல் கொண்ட அன்பினை
அளந்திட முடியுமா?
காலங்கள் பல கடந்தும் கண்ணீருடன்
கண்கள் உன் நினைவுடன்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்- எங்கள்
உள்ளங்களில் நீங்காமல் நிறைந்திருப்பாய் மகனே