என் தேவதையே அக்கா! அன்னையின் மடிக்கு உன்னோடு போட்டி போட்டிருக்கிறேன். நீங்கள் சமைத்து கொடுத்ததை ருசித்திருக்கிறேன். சண்டையில் அழுதிருக்க வேண்டும். மீண்டும் உன் தோளிலேயே உறங்கியிருக்கிறேன். உன் கைகள் கோர்த்தே நான் நடை பழகியிருக்க வேண்டும். ஆம் உன் கைகள் கோர்த்தே நடை பழகியிருக்கிறேன். நீ அக்கா நான் தங்கச்சி என்ற புரிதல் வரும் வயதில் நமக்குள் ஒரு பாசம் ஒரு கவனிப்பு வருமே... அதை நான் உணர்ந்திருக்கின்றேன். எனக்கொன்று நேருகையில் என் கண்களின் கண்ணீரை முன் கூட்டியே அறிந்து என் கவனத்தை திசைதிருப்பும் உன் அன்பை நான் அங்க வந்த போது கவனித்தேன். உன் திருமணம் முடிந்து சாவகச்சேரி போகவும் அப்பாவிடம் அடம்பிடித்து உன்னோடு வந்தேன். தாயிழந்து தந்தையிழந்து தனித்து நிற்கும் போது எனக்கான உறவாக இருந்திருக்க வேண்டும் . அக்கா என்ற ஒரு வார்த்தைக்கு உருவாகி நீ நின்றிருக்க வேண்டும். எனக்கொன்றென்றால் நான் ஓடி வந்து புலம்பியிருக்க வேண்டும். இன்று ஏங்குகின்றேன்... தவிக்கின்றேன்.... கண்ணீர் வடிக்கின்றேன்... உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டி பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!🙏😭
இன்று ஐந்தாம் ஆண்டு நினைவுநாள்💐😭🙏 என் தேவதையே அக்கா! அன்னையின் மடிக்கு உன்னோடு போட்டி போட்டிருக்கிறேன். நீங்கள் சமைத்து கொடுத்ததை ருசித்திருக்கிறேன். சண்டையில் அழுதிருக்க வேண்டும். மீண்டும் உன்...