1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனுஸ்கோடி ஐயம்பிள்ளை
வயது 95
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனுஸ்கோடி ஐயம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்