யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாய், Toronto Canada ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலக்ஷ்மி இராஜரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பூத்திருந்த இடங்கள் எல்லாம்
பாலைவனம் போல் தெரிய
நடந்து போன பாதையில்
உங்கள் கால்தடங்களே
விடிகின்ற வேளைகளில்
கண்ணெதிரே
நிற்பவர் இல்லையே
என ஏங்க கண்ணீர் வழிகின்றதே
சூரியன் உதிக்க மறந்தாலும்
கடலலை கரைதொட மறந்தாலும்
கண்கள் இமைக்க மறந்தாலும்
இதயம் துடிக்க மறந்தாலும்
தங்களின் நினைவுகளை
நாங்கள் எப்படி மறப்போம்?
நாட்கள் 31 கடக்கட்டும்
வயதுகள்
ஓடிச் செல்லட்டும்
நீங்கள் அருகில் இருப்பதாய்
வாழ்க்கையை தொடர்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Kiruba, Ravi, Jana and Babu, sorry for the loss of your mother. Our condolences to all. Balachandran and family