
இந்தியா புனேவைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலி , பிரித்தானியா London Eastham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டெய்சி கிரேஸ் செல்வகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எனக்கு.....
ஆயிரம் மழைத்துளிகள்!!
தாமரை இதழ் நனைத்தோடும்!
அங்கே ஒரு துளி மட்டும்!
தேங்கி நின்று நளினம் ஆடும்!
அந்த ஒற்றைத் துளிதான்
நீ எனக்கு!
ஆயிரம் உறவு எனைத் தாலாட்ட!!
ஏங்கிய இதயம்உனை மட்டும் நாடுதே!
உப்பு கரிக்க அழுத கண்கள்!
ஏக்கம் கலைந்திட உனையே தேடுதே!!
நீ என்பவள் என்னுடையவள்
என!!!
உரத்து கத்த என் தொண்டைக் குழி
ஏங்கித் தவிக்க- என்
நெஞ்சுடை மனம் நிஜம் இதுவா!!
என
என் நெஞ்சறைந்து போகுதே!!
ஐயோ
என் மனம் நித்தம் நித்தம்
செத்துய்து போகுதே!!
வாழ்வொன்று வாழ வேண்டிய
இதயம்
கடினமாய்க் கனக்குதே
என்னவள் நீ அருகில் இருந்தும்
என்னவள் நீ இல்லை எனும் போது
என்
நெஞ்சுனின்று போகுதே!!
வாழ்வே வாழ்வே
மறுமுறை ஒருமுறை வாரயோ!!
நானும் ஒருமுறை உன்னுடன்
முழுதாய் வாழ்ந்திட!
A person that departs from this earth never truly leaves, for they're still alive in our hearts, and through our memories, they live on. My deepest condolences.