Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 MAY 1948
இறப்பு 21 NOV 2019
அமரர் டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம்
வயது 71
அமரர் டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம் 1948 - 2019 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்  கொண்ட டெய்ஸி அன்னமலர் அரியரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்பை ஊட்டி அறிவுக்கு வழிகாட்டி துன்பத்திலும், இன்பத்திலும்,
எம்மைக் காத்து வழிநடத்தி எமக்குரிய சகல நன்மைகளுக்கும்
ஈடு இணையாக இருந்து உறவினில் கலந்த என் அன்னையே
உங்கள் உறவிற்காக ஏங்குகின்றோம் அம்மா!

எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அம்மா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!

31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அம்மா!

உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.