அமெரிக்க மிஷனரிகளுக்கு சவாலாக பாவலரால் உருவாக்கப்பட மகாஜனக்கல்லூரி தீவின் கல்வி மற்றும் பல்துறைச் சாதனைகளின் மையமாக மாற அமரரைப் போன்றவர்களின் பிரதிபலன் எதிர்பாராத உழைப்பே காரணமென்றால் அது மிகையாகாது. இல்ல மெய்வல்லுனர் சுவட்டு மைதானப் போட்டிகளிலும் , இதர விளையாட்டுப் போட்டிகளிலும் , அகில இலங்கைக் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் அன்றாரின் பங்களிப்பு எப்போதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எம் வகுப்பு மாணவர்கள் 1980 இல் கொழும்புச் சுற்றுலா சென்று பேரா ஏரியில் விபத்தில் மாட்டியபோது அருந்துணையாகவும் ஆறுதலாகவும் விளங்கிவர். புலம்பெயர் வாழ்விலும் எம் தேச விடியலுக்கான ஒன்றுகூடல்களில் அமரர் தவறாது பிரசன்னமாவார். விருந்தோம்பலுக்கும், கலகலப்புக்கும் பேர்போன ஒரு மகாஜனன் எம்மைப் பிரிந்தார். அவர் நினைவு என்றும் வாழும் 1982 க பொ த சாதாரணம் மாணவர்கள்
விருந்தோம்பலுக்கும், கலகலப்புக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த, எல்லோராலும் அன்புடன் அறியப்பட்ட பற்ரிக் பாலா, கல்லூரியின் மெய் வல்லுனர் போட்டிகளிலும் இதர விளையாட்டுப் போட்டிகளிலும் மிகுந்த...