2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குருஸ் மனோகரசீலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும்- அப்பா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள் துயர்துடைக்க
வேண்டாமா?அப்பாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!
என் மனதோடு போராடும் உன் மறையாத
ஞாபகங்கள் எனை என்றும் வாட்டுதையா!
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான் காத்திருந்த காலங்கள்
இன்று ஆண்டுகள் இரண்டு ஆகியது...
கனவுகள் நிறைவேறும் காலமதில் காலன்
அவன் அழைத்து விட்டான் உங்கள்
கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று
தெரியாது கலங்கி நிற்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences, thoughts and prayers are with you. Rest in peace