
யாழ். குருநகர் இல. 5 அடப்பன் வீதி 3ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிளாறம்மா ஏபிரகாம் அவர்கள் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பாக்கியம் மத்தினா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ்தம்பி ஏபிரகாம் அக்சினஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானப்பிரகாசம் சேவியர் ஏபிரகாம்(ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனற் பெற்றநிலா(அனிற்றா -ஜேர்மனி), ஜெசியா ரெறன்சியா(சூட்டி- இலங்கை), பெனற் எட்வின்(சசி- கனடா), மேவின் லெஸ்லி(ரவி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றெஜினோல்ட்(மனோ- ஜேர்மனி), அருள்தாசன்(ராஜன் -இலங்கை), அன்ரநெற்(பவிதா- கனடா), கிறிஸ்ரா தாரணி(தாரணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜேசுதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் ஏபிரகாம், றீற்றர் ஏபிரகாம், Dr.கனியூட் ஏபிரகாம், கெனடி ஏபிரகாம், அன்ரன் ஏபிரகாம் மற்றும் மலர் செபஸ்ரியன்(ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காமலின், ஸ்ரெபன், ஸ்ரெபியா, சரோலின், தருண், றவிசா, தாரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details