யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதரம்பரம்பிள்ளை திரவியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பாசத்துடனே எங்களை
அருகணைத்து அரவணைத்து
பண்பையும் அன்பையும்
பொறுமையுடன் எடுத்துரைத்து
நல் ஆசானாய் நல்லறிவு புகட்டி
சோதனைகளை சாதனைகளாக
வாழ்ந்து காட்டி
இனிதே வாழும் அழகிய வாழ்வில்
அடக்கி ஆளும் அகந்தையை விடுத்து
அடங்கி ஒடுங்கும் அச்சத்தையும் தவிர்த்து
குடும்பம் குடும்பம் என ஓடாய் தேய்ந்து
கடவுள் கொடுத்த வரம் நீதானப்பா
அப்பா உங்கள் இறப்பிற்கு
பின் இழப்பதற்கு எதுவுமில்லை
தன்னம்பிக்கை தந்த நீங்கள் - இன்று
எங்களுடன் இல்லை
விட்டு விட்டு துடிக்கும் எம் இதயத்தில்
என்றென்றும் உங்கள் நினனவுகளுடன்
அன்னாரின் மறைவுச்செய்திகேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் சமூகவலைதளங்கள் ஊடாகவும் எம்மைத் தொடர்புகொண்டு அனுதாபங்களை பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.