Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 OCT 1969
இறப்பு 21 FEB 2021
அமரர் கிறிஸ்டி ராஜ்குமார்
வயது 51
அமரர் கிறிஸ்டி ராஜ்குமார் 1969 - 2021 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்டி ராஜ்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பு நண்பனே! ஆருயிர்த் தோழனே!
ஓராண்டு ஆனது நீ மறைந்து...
ஆயினும் உன் நினைவு மறையாது எம்மை விட்டு  

இன்பமோ துன்பமோ எம்முடன் இணைந்திருந்தாய்
இருக்கும் இடமெல்லாம். உன் காந்தக்குரல் கொண்டு
களிப்புடனே பேசி.. கலகலப்பாய் ஆக்கிடுவாய்
நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தவன் நீ  

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனதுவோ!
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
 துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
 பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
 என்றும் மறையாது உங்கள் நினைவு
 எம் மனதை விட்டு!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: நண்பன் -சுபாஷ்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 23 Feb, 2021