Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAY 1934
இறப்பு 22 JUL 2013
அமரர் சின்னத்தம்பி தம்பிராஜா
முன்னாள் ஆசிரியர் யாழ் மத்திய கல்லூரி, இளைப்பாறிய உபஅதிபர், கலாநிதி. ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயம், காரைநகர் இந்துக்கல்லூரி
வயது 79
அமரர் சின்னத்தம்பி தம்பிராஜா 1934 - 2013 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமி விளானையை வதிவிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே

எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!

வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்

அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...

எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்

ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.