
-
22 JUL 1934 - 19 DEC 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : கைதடி மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுவிஸ், Switzerland



#கண்ணீர் காணிக்கை! |சின்னவன் கந்தையா| கைதடி மேற்கின் காலத்தால் அழிக்கவியலா அடையாளம்! ஏற்றத்தாழ்வுகளுக்காய் எதிர்த்து நின்ற முற்போக்காளன்! நாலுபேருக்கு நல்லது செய்ய எண்ணிய நற் சிந்தனையாளன்! நாளும் இறைவனை வழிபட்ட பக்தியாளன்! வேர்வை சிந்தி உயர்வுகண்ட உழைப்பாளன்! கணீரென்ற குரலால் பணிந்திட செய்திடும் சிம்மக்குரலோன்! தலைமைத்துவத்தால் தனிச்சிறப்பு கண்ட பண்பாளன்! அன்றைய காலத்தில் முன்னெடுத்தது நல் நோக்கம்! ஊருக்காய் உறவுக்காய் செய்தவை எல்லாமே ஆக்கம்! இவரின் முயற்சிகள் அடுத்துவந்த தலைமுறைக்கும் அளித்தது ஊக்கம்! இன்றும்கூட தெரிகிறது அதன் தாக்கம்! சரஸ்வதி நிலையத்தின் முன்னை நாள் வழிகாட்டி! எம் சமுதாயத்தின் எழுச்சிக்கான திசைகாட்டி! உடலால் மறைந்தாலும் உணர்வால் உயிர்ப்புடன் என்றென்றும் எமக்குள் நிறைந்திருப்பார்! ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்!
Summary
-
கைதடி மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
சுவிஸ், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion