

நண்பா, நம்ம மறுக்கிறது மனம். நற்செய்திதான் தருவாய் என்றிருந்தேன், நடுப்பகலில் நான் இடிந்தேன் உன் உயிர் பிரிந்தென்று. நாம் ஒன்றாக வாழ்ந்த அந்த இனிய நாட்களை நீ நினைவு கூரும்போது நாம் அடைந்த சந்தோஷங்கள் நமக்குத்தான் தெரியும். சீதாக்கா வீட்டிலும், சேவே கூவாட்டெசிலும் சேர்ந்து வாழ்ந்தேமே. எதையும் எப்போதும் பகிர்ந்து இருந்தோமே இப்போது நீ இல்லை என நினைக்க முடியவில்லை நண்பா. நீ புத்தகங்கள் வாசிப்பது எல்லாம் எனது ஊக்குபிப்புத்தான் என நீ கூறுவாய், இருப்பினும் உனது ஆர்வம்தான் என்னையும் ஊக்குவிக்கிறது என்பதை நீ அறிவாயா? உன் இழப்பை என்னால் ஏற்க முடியவில்லை எப்படி உன் மனைவியும் பிள்ளைகளும் பரிதவிப்பார்கள் என நான் ஏங்குகிறேன். நண்பா மீண்டும் நான் உன்னை சந்திக்க ஏங்குகிறேன்.