

மனிதநேயன் சிதம்பரப்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் இவ்வுலகினை நீங்கிய வேளை மனம்நொந்து இரங்கியவை! இளவலே சென்றனையோ? குமுளமுனை பெயரோங்க வைத்தவனே மன்னவனே அமுதமென அன்புறத் நீகடந்த பாதையோ நீளமையா குமுதமென ஐயாத்துரை மருகனானாய் கொக்காவில்வீதி முதுசமென செல்வராணியை அணைத்தநீ ஏன்பிரிந்தாய்? நெஞ்சம் தாங்கவில்லை உன்பிரிவைக் கேட்டபோது தஞ்சமென உன்னிடத்;தில் தந்தவளோ மாணிக்கப் புதையல் ரதியெனவே மன்மதனாய் வாழ்ந்தாய் சிதையிலே போகத்தான் அன்பூற்றாய் வாழ்ந்தாயோ? சீர்பெற்ற புன்னகையில் பதுமையாக வாழ்ந்திருந்தாய் கார்பெற்ற மெல்லியலாள் இன்புறவே வைத்திருந்தாய் போர்;க்காலம் அமைதியுற இணைபிரியாது இன்புறவாய் ஊர்போற்ற வாழ்ந்தவனே பாதிவழி தவறியதேன்? மைந்தனுக்குத் திருமணம் மனவிருப்பாய்ச் செய்யவென மையடித்து வீட்டைப் புதுமெருகூட்ட நீசெய்த செய்கை வையகத்தை விட்டகல வைத்ததுவோ மாதவனே மகேனே? வைதறியா மென்மொழி கேட்காது பாதியில் ஏன்பிரிந்தாய் ! அன்பின் அகமகிழ்வாய் நிலவளவைத் தொழில்நுட்பம் இன்போடு பணிதந்து அனைவரும் ஒன்றெனவே நீநடந்தாய் அன்புறவாய் அணைத்திருந்தாய் உறவுகள் சுற்றிவர இன்பின் உன்னரிய புதல்வர்கள் துயர்சூழப் பிரிந்தனையேன்? இன்பப்புதையல் எனமருத்துவராய், பொறியிலாளராய்க்கண்டு; இன்பான மனையாளை பணிக்குவிடுத்து தனிவழியே கோக இப்புவியை விட்டகல விதியாச்சோ எம்மவனே மகேந்திரா ஆப்புவியில் அமைதிதான் அடைந்து சாந்திபெற்றிடுவாய்! புன்முறுவல் மாறா இன்முகத்துத் தயாபரனே உந்தன் புன்னகைதான் நெஞ்சில் நிழலாடுதையா புதுமையனே புன்னகையின் மன்னவனே புன்னகையைக் காண்பதெங்கே புனர்ஜென்மம் எடுத்துத்தான் மீண்டிங்கு வாரோயோ! பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் மைத்துணர், மைத்துனிமார் மற்றும் குடும்ப உறவினர்களின் துயரில் பங்குகொள்ளுவதோடு அன்னாரின் ஆன்ம சாந்தியடைய வேண்டுகின்றோம் ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! திரு.தீருமதி சிவபாலு தயாதேவி குடும்பம் -கனடா