யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விவேகானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கடந்த 10.06.2024 அன்று சிவபதமடைந்த எமது தந்தையின் மறைவுசெய்தி கேட்டு எமது துயர் பகிரநேரில் கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனுதாப செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி, செய்தித் தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துகொள்கின்றோம்.
எமது தந்தையின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 08.07.2024 திங்கட்கிழமை அதிகாலை 8.00 மணியளவில் Uk ல் நடைபெற்று பின்னர் சபிண்டீகரண கிரியைகள் 10/07/2024 பி.ப. 12.30 மணியளவில் அன்னாரது UK இல்லத்திலும் மற்றும் சபிண்டீகரண அஞ்சலி நிகழ்வு France ல் 10/07/2024 பி.ப. 12.30 மணியளவில் ஹீ காமாட்சி அம்மன் ஆலயம் 36, Avenue de la Division Leclerc 93000 Bobigny யிலும் நடைபெறுவதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Accept our heartfelt condolences. May his soul rest in peace. Sreekaran Punniamoorthy family