

பூநகரியின் அழகன்,அன்பான பண்பாளன் தாஸ் அண்ணா ஏன் மறைந்தார்? பூநகரி தம்பிராயில் பிறந்து பூநகரி மக்கள்கடையில் எல்லோரும் விரும்பிய முகாமையாளராகவும், பின் கொழும்பு தபால்தந்தி தொலைத்தொடர்பு திணைக்களத்திலும்,பின்பிரான்சிலும் வாழ்ந்து மீண்டும் தாயகம்திரும்பி பின் கிராமசேவகராகவும் பணியாற்றி ஓய்வு பெற்று பின் கனடாவில் வாழ்ந்தவருமாகிய திரு.செல்லயா சண்முகதாசு அண்ணை அவர்கள் கனடாவில் நேற்று மாலை மறைந்தார் அமரர் ஆனார் என்ற தகவலை இன்றுமுகநுாலில் முதல் தகவலாகப் பார்த்தேன் திகைத்தேன். மிகவும் பண்பானவர் சிரித்துக்கொண்டே பேசுவார் சிறுஅகவையிலிருந்தே தந்தையாரிடம் மருந்திற்கு வரும்போதும் மக்கள்கடைக்காலத்திலும் பழகியுள்ளேன். இறுதிக்காலங்களிலும் இடையிடை தொலைபேசியில் பேசியுள்ளோம். அவர்மறைவு மனதை உடைத்துள்ளது அவரின் துயரில் துவழும் துணைவி, பிள்ளைகள் மருமக்கள், மற்றும் உறவுகளுக்கும், ஊரவர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து அவரின் உயிர் இறையுடன் சேர வழிபடுவோம். கனடா நேரம்பிற்பகல் மறைந்துள்ளார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.