1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா சண்முகதாசன்
ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்(GS)- கிளிநொச்சி
வயது 67
Tribute
51
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பூநகரியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சண்முகதாசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
இதயம் ஏற்க மறுக்கிறது எம் தந்தையே...
உருண்டு ஓடி விட்டது ஒரு வருடம்
எத்தனை வருடங்கள் ஓடினாலும்
ஏற்குமோ
எம் மனம் உங்கள் பிரிவை...
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடம் ஒன்று வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
உம் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உம் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி...!! ஓம் சாந்தி...!! ஓம் சாந்தி...!!
தகவல்:
குடும்பத்தினர்