

மார்கண்டேயர் ஐயா அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. வன்னிமண் சிறந்த தமிழ்தேசிய ஆளுமையை இழந்திருப்பது ஒரு துயரமான தருணம்... போர் சூழலில் செஞ்சிலுவை சங்கத்துக்கு பொறுப்பாக இருந்து இவர் செய்த சேவை போற்றுதலுக்குரியது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அன்னியதேசத்தில் வாழ்ந்தாலும் இவரின் நினைவுகள் வவுனியா... ஓமந்தை ...என அங்கேயே சுழன்றுகொண்டிருந்ததை அவருடன் தொலைபேசியில் கதைக்கும் போது அறியகூடியதாக இருந்தது. எண்பதுகளிலேயே உள்ளூர் அரசியலில் இருந்து உலகஅரசியல் வரை நல்ல ஞானம் உள்ளவராக இருந்தார்... அதே வழியில் பிள்ளைகளையும் வளர்த்தார்.... நான் பல கிரிக்கற்போட்டிகளை இவருடன் அமர்ந்து பார்த்திருக்கின்றேன் அது ஒரு அழகிய கனா காலமாக இப்போ மாறிவிட்டது. தமயந்தி தனஞ்சயன் தயாபரன் பிரஷாந்தினி.... நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம் அவர் இறைவனடியில் இளைப்பாற சென்றவிட்டார் அவ்வளவுதான்... எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி. சக்திரகு நாம்தமிழர் கனடா 18பங்குனி2025.
We were deeply saddened to hear about the loss of your beloved appa . Please accept our heartfelt condolences during this difficult time. He lived a long and meaningful life, touching the hearts of...