அம்மா என்ற உறவு அற்புதமானது. அன்புடன் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார நாம் வாழ்ந்திட வாழவைத்த தெய்வமே. புன்னகைப் பூவொன்று இறைவன் பொற்பாதத்தில் அர்ச்சனை மலராக உதிர்ந்து விட்டது . சில்லறை சிதறும் சிரிப்பழகி இன்று சிலையாய்த் தூங்குகிறாள். கொஞ்சு மொழி பேசி இஞ்சை வாங்கோ என அழைத்து அருகில் இரகசியமாகச் சிலகதை பேசிய எம் தாயே மாமியைக் கோலக்குமரன் அந்தக் கொக்குவிலின் மஞ்சவனப்பதி மால் மருகன் நித்திய ஜீவனாக நின்மதியாய்த் தூங்க நீலமயிலின் மீது ஏந்தி எங்கு கொண்டு சென்றானோ ? கற்றுத்தந்தவள் நீ. பற்று வைத்தவள் நீ. இனிய தருணங்களை எமதாக்கியவளும் நீ. இற்று விடா இனிய வாழ்வை எமக்களித்து அதில் இப்போ அற்றுப் போனதேன் அம்மா ! உதிர்ந்து போன எம் மாமலரே ! குடியிருந்த எம் மாணிக்கக் கோவிலே ! தவிக்கின்றோம் குதூகலிக்க நீயின்றி ! நெஞ்சில் வலிமையுடன் . நீங்காத உன் நினைவுகளுடன் உன் மகன் சிவம் மருமகள் ரோகினி
Sri and Family, our thoughts and prayers are with you. May aunty Rest In Peace