

யாழ். பலாலி கிழக்கு அம்மன்கோயிலடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு தம்பசிட்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம் காசித்தம்பி அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
தம்பிப்பிள்ளை, காலஞ்சென்ற பரமேஸ்வரன், கமலாதேவி, விக்னேஸ்வரன்(கனடா), சறோஜினிதேவி, தங்கேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சின்னத்தங்கம், காலஞ்சென்ற தம்பித்துரை, தம்பிஐயா, இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி, இந்திராணி, தேவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசமலர், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி, அருமைதாசன் மற்றும் செல்வநாயகி(கனடா), ஸ்ரீஞானதேவன், அருந்ததி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்சினி, சபேசன், தாரணி- அருன்ராஜ், சர்மினி, நகுலேஸ்வரி- வதனகுமார், லிங்கேஸ்வரன்- கவிதா(இந்தியா), கேதீஸ்வரன்- விக்னேஸ்வரி(இந்தியா), காலஞ்சென்றவர்களான சுபாஸ்கரன், கிருசாந்தினி, சுவேந்தினி, கஜகுமார் மற்றும் நந்தகுமார்- அனித்தா(பிரான்ஸ்), நந்தகுமாரி- காலஞ்சென்ற கஜரூபன், லலிதா- இராகவன், கீர்தனன், நிவேதன், சௌமியா(கனடா), தர்மிலன், தர்மகாந்தன், சுஜிவன், கஜருபன், கஜேந்திரன், கீர்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்ஷஜன், விதுஷன், நிலவழகன், நிலவழகி, காலஞ்சென்ற வானுஜன், கிருஷன்(இந்தியா), சுகிர்தன்(இந்தியா), பரணிகா(இந்தியா), காலஞ்சென்ற கஜானி, லத்திகா, அனனிஜா, திவொ(பிரான்ஸ்), ரழமிசன், டினோசன், சோபிகா, ரோபிகா, சர்விதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் உரும்பிராய் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் பலாலி வடகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.