அவள் முகத்தில் விளையாடும் அழகிய புன்முறுவல்
அவள் கதைகள் எம்மனதை துவட்டும் இனிய கானங்கள்
பகிடியை கேட்டு வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும் நேரங்கள்
இரவு பகலெல்லாம் பின்வீதியில் திறந்த கதவுடன் நின்று எங்களை
வரவேற்ற நட்புகள்
இதெல்லாம் நம் இதயத்தில் பதிந்த நவரத்தினங்கள்
அவளின் உடற்சேதங்கள் நாளாந்தம் அதிகரித்தாலும் மனம் சோராமல்
விதிக்கே சவால் விட்டு வாழ்ந்து காட்டுகிறேன் என்று சபதமிட்டாள்
எங்கள் குறைகளையெல்லாம் ஒரு நுளம்புக்கடி போலாக்கினாள்
இறையருளை ஆயுதமாய்ப் பொருத்தி தினமும் களத்தில் இறங்கினாள்
அவள் புன்முறுவலுக்கு குறை வைக்காமலே போராடினாள்
இந்த சாகசத்தின் வெற்றி அவளை அடுத்ததில் ஜெயிக்கவைக்கும்
யோகிகளையே திகைக்க வைத்த அவள் மனவைரம் தேவர்களின் பாராட்டையழைக்கும்
இவ்வுலகில் எட்டாத இன்பங்களெல்லாம் ஆயிரம் மடங்கு அங்கவளைச் சேரும்
அவள் சேர்த்து வைத்த கனவுகள் அனைத்தும் நனவாகவேண்டும்
அவளை வானவர்கள் பூமாலைகள் சொரிந்து மேளதாளங்களுடன் வரவேற்கவேண்டும்
சந்து ! உனக்கு என்றும் எங்கள் அன்பு ததும்பிய கண்ணீர் அஞ்சலி
??
Kiri & Tharani I'm so sorry for your loss. May her soul rest in peace.