Clicky

பிறப்பு 05 FEB 1963
இறப்பு 17 AUG 2024
அமரர் சந்திரகுமார் சாதுசிகாமணிப்பிள்ளை
வயது 61
அமரர் சந்திரகுமார் சாதுசிகாமணிப்பிள்ளை 1963 - 2024 சுதுமலை தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. V. Kirubaharan 24 AUG 2024 France

சந்துரூவின் மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதிரிகள்,உறவினர் நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதபாங்கள். 1987ம் ஆண்டு, நாங்கள் சுதுலையில், அகாதிமுகமில் இருந்தவேளையில், சந்துரூவும் எங்களுடன் அங்கு இருந்தவர். சந்துரூ அவர்கள் குடும்பத்தினருடன் அகதிமுகாமிற்கு வரும் வழியில், கயப்பட்டுவிட்டார். அவரது காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக, சுதுலையில் எமக்கு அண்மையிலிருந்த இந்திய இராணுவ முகாமிற்கு, சந்துரூவும் சிலரும் சென்ற பொழுது, இந்திய இராணுவம் சந்துரூவை தடுத்து வைத்து கொண்டு, இவருடன் சென்றவர்களை அகதிமுகாமிற்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். இந்திய இராணுவ முகாமில் சந்துரூ மிக மோசமாக நடத்தப்பட்டு, நாங்கள் யாவரும் வீடு செல்லும் அன்றே,சத்துரூவை விடுதலை செய்தார்கள். எமது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் பல இருந்தாலும், சந்துரூ அவ்வேளையில், சுதுலையில் இந்திய இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பகடதும் நாம் மறக்க முடியாத ஒரு சம்பவம். சந்துரூவின் ஆத்மா சந்தியடைய இறைவனை பிரார்த்திகிறோம். சுட்டி & டியேற்றி (சுதுமலை இன்ஸ்பெக்டர் விசுவலிங்கத்தின் மகன்) (ச. வி. கிருபாகரன்) பாரிஸ், பிரான்ஸ்