யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்திரகுமார் கந்தையா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிடங்களாய் நாட்களாய் மாதங்களாய்- இன்று
ஒன்பது ஆண்டுகளாய்
வளர்ந்து நிற்பது உன் பிரிவின் சோகம்
கட்டி அணைத்து ஆனந்தம் கொண்டு- உனை
பெற்று வளர்த்து பெருமிதம் கொண்டு
“என் மகன் கண்ணன்”- என்ற
இறுமாப்புடன் இன்றும் வாழ்பவள்
துக்கமும் துயரமும் சூழ
உன் பிரிவின் வேதனை பெருக்கெடுத்தோட
காலங்களை சுமை எனக் கடந்து
கண் கலங்கி நிட்கின்றாள்
உனை ஈன்றெடுத்த தாய்!
வம்புக்கும் குட்டி சண்டைக்கும்
பாசம் அன்புக்கும்
அண்ணன் ஒருவனே என
ஏங்கித் தவிக்கும் தங்கை!
தனயனாய், தமையனாய்,
கணவனாய், தகப்பனாய்,
மாமனாய், மச்சானாய், மருமகனாய்
இன்னும் எத்தனை தோற்றங்கள் கொண்டாய்
இன்று எம் கண் முன்னே தோன்றாது
எங்கு நீ சென்றாய்!
வருவாயோ மீண்டும் ஒரு பிறவி எடுத்து- உன்
அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கும் உறவுகளுக்கு
தருவாயோ ஓர் தரிசனம்
மீண்டும் உன் அழகிய தோற்றமெடுத்து
கண்ணா, நீ மறைந்து விட்டாயென
சொல்பவர் யாரேனும் உண்டோ?
குழந்தையும் அறியும் உன் குணத்தை
உணர்ந்தவர் அறிவர்
நீ மறைந்து மறைந்திருந்து எமை
வாழ வைத்துக் கொண்டிருக்கிறாய்
காலத்தால் வற்றுமோ சமுத்திரம்
இங்கே சமுத்திரம் ஆனது
நம் கண்ணீர் துளிகள்
ஒன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்...
உன் பிரிவால் என்றும் வாடும்
அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
RIP