யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மிருசுவில், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கேத்ரின் சுமதி ராஜரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்மோடு இருந்த கேத்ரின் இன்று
காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு ஒன்று
வந்தும் ஆறமுடியவில்லை!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே
உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது !
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் அம்மா.
“To live in the hearts of those we love is never to die”