Clicky

30ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 02 FEB 1931
விண்ணில் 08 SEP 1995
அமரர் புவனேஸ்வரி பாலசிங்கம்
வயது 64
அமரர் புவனேஸ்வரி பாலசிங்கம் 1931 - 1995 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:06/09/2025

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பான புன்னகையால்
அனைவரையும் கவர்ந்து
உன்னதமான குணத்தால்
உறவுகளுடன் இணைந்து இருந்தவளே

எம்மை எல்லாம் விட்டு
எட்டாத தூரம் சென்று
முப்பது ஆண்டுகளை
முழுவதுமாய் கடந்து விட்டோம் அம்மம்மாவே

நல்ல எண்ணங்களை எல்லாம்
நம்முள் விதைத்துச் சென்றவளே
நம்மை இயக்கி உயிர் வாழ வைத்தது
நாளும் உந்தன் நினைவுதான்

எத்தனை ஆண்டுகள் ஆனபோதும்
 எம் மனதில் அழியாத கோலமாய்
நித்தமும் நிலைத்து நிற்பாய்
நினைவில் கலந்து இருப்பாய் அம்மம்மாவே

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

உங்கள் பிரிவால் துயருறும் மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்: கதிர். வசந்தரூபன்(பேரப்பிள்ளை)

தொடர்புகளுக்கு

கதிர் வசந்தரூபன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute