Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 22 SEP 1947
மறைவு 12 AUG 2021
அமரர் பொனிபாஸ் செபமாலை மரியம்மா (செல்வராணி)
வயது 73
அமரர் பொனிபாஸ் செபமாலை மரியம்மா 1947 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிபாஸ் செபமாலை மரியம்மா அவர்களின் நன்றி நவிலல்.

மீளாத் துயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீர்களா மம்மி?
கண்ணீர் துளிகள் மட்டுமே
உமக்காய் மம்மி
வலிமையிழந்த நிலையிலும்
வார்த்தை மெளனித்த போதிலும்
விழிகளால் மொழி பேசி
எங்களையும் பேரப்பிள்ளைகளையும்
ஒற்றைக்கை அரவணைப்பால்
அரவணைத்து வழிநடத்திய உம்மை
இனியெங்கு நாம் காண்போம் மம்மி?
கனத்த இதயங்களுடனும் கலையாத
நினைவுகளுடனும்
விழி வழி வழியும் துளி நீரை கண்ணிர்ப்
பூக்களாக
நன்றீப்பூக்களாக காணிக்கையாக்குகின்றோம் மம்மி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் வாழ்ந்து எமை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற எங்கள் அன்புத் தாயாரின் மறைந்த செய்தி அறிந்து எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும் உலகில் பல பாகங்களிலும் இருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறி எமது துக்கத்தில் பங்கு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்னையின் நல்லடக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டும் மற்றும் பூங்கொத்துகள் மலர்வளையங்களால் அலங்கரித்தவர்கள் இன்னும் பற்பல வழிகளிலும் உதவி செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்பே உருவான எங்கள் தாயாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 11-09-2021 சனிக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் பரிஸ் ஒப்புரவு அன்னை சிற்றாலயத்தில்(NOTRE DAME DE RECONCILIATRICE, 57 Bd de Belleville PARIS), திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.