Clicky

பிறப்பு 30 SEP 1940
இறப்பு 21 JUN 2019
அமரர் புவனேஸ்வரி கோபாலரத்தினம்
முன்னாள் விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளர்
வயது 78
அமரர் புவனேஸ்வரி கோபாலரத்தினம் 1940 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தயாகரன், சுஜாதா ,சிவானி, அருண் & திருமதி. சரோஜினி குமாரசாமி 27 JUN 2019 United Kingdom

எனக்கு விபரம் தெரிந்த காலம்முதல் மாமியை அறிவேன். காலம் சென்ற என் தந்தைக்கு மாமி மிக நெருங்கிய இரத்தஉறவு முறை. உறவுகளுக்கு அப்பால் ஒரு அன்பு உறவை நிரந்தரமாக பிரிந்து தவிர்க்கிறேன். எப்போதும் சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும் தான் மாமி எம்மிடம் விட்டுச்சென்ற எச்சங்கள். சிலவாரங்களுக்கு முன்புதான் என் அருமைத்தாயின் பிறந்ததினத்துக்கு வீடு தேடிவந்து வாழ்த்தியதே மாமியை நேரில் பார்த்த கடைசி சந்தர்ப்பம். பிறப்பு இருந்தால் இறப்பும் நிச்சயம். இந்த நியதிக்கு யார்தான் விதிவிலக்கு. மாமியின் பேரிழப்பில் வாடும் அவரது பிள்ளைகளுக்கு எல்லாம்வல்ல ஆண்டவன் மனஉறுதியியையும், மனச்சாந்தியையும் தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.