Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 OCT 1957
இறப்பு 19 OCT 2024
அமரர் பெஞ்சமின் சிங்கராசன்
வயது 66
அமரர் பெஞ்சமின் சிங்கராசன் 1957 - 2024 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Altendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெஞ்சமின் சிங்கராசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

ஆற்றாது கண்ணீர் அழுது புலம்புகின்றோம்
ஓராண்டு மறைந்தாலும் பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அவர்கள் விண்ணக வாழ்வெய்திய முதலாவது ஆண்டு நினைவாக அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபடும். இத்திருப்பலியில் பங்குகொண்டு அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடத்தில் மன்றாட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

செபம்
அனைத்தையும் ஆளுகின்ற அன்பின் இறைவா நாங்கள் நினையாத நேரத்தில் எம்மிடமிருந்து நீர் அழைத்துக்கொண்ட திரு.பெஞ்சமீன் சிங்கராசன் என்பவரின் ஆன்மா மீது உமது ஒளியின் பொலிவையும் யேசுவின் உயிர்ப்பின் வெற்றியின் பங்கை அளித்து உம் புனிதர்களுடன் ஒன்றித்து வாழ அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமேன்

அல்டன்டோர்வ் - சுவிஸ்

தகவல்: குடும்பத்தினர்