முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியா சிவகங்கை ஒக்கூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாவிலுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
-யோவான் 11:25
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்களருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எம் கண்கள் களைத்ததப்பா...
அமைதியின் அடைக்கலமாகவும்...
அன்பின் பிறப்பிடமாகவும்...
பாசத்தின் ஜோதியாகவும்...
நேசத்தின் ஒளியாகவும்...
தாய் தந்தைக்கு பண்புள்ள மகனாகவும்...
மனைவிக்கு அன்பான கணவனாகவும்...
பிள்ளைகளுக்கு பாசமுள்ள அப்பாவாகவும்..
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...
உமக்கு துணையாக
உமது அண்ணனையும்
துணைக்கு அழைத்து சென்றீரோ..
ஏழேழு ஜென்மங்கள்
எடுத்தாலும்
எமக்கு சகோதரனாய்
பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம்!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..
இன்று நீங்கள் இல்லாத
இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..