10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் பவானி ஜெகதீஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்..!
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை..!
தகவல்:
கணவர்,பிள்ளைகள்.
Missing you Bavani.Rest in Peace.