எனது பப்பா நான் அறிந்த நாள் மிகவும் அக்கறையுள்ள, இரக்கமுள்ள, தாராளமான, அன்பான மற்றும் கனிவானவர். பப்பா தனது பேரப்பிள்ளைகள் அனைவரோடும் மிகவும் அன்பாக இருப்பார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பப்பாவுடன் வாழும் பெரும் பாக்கியத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். அதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவித்தேன். நான் பாடசாலையில் இருந்து வரும் போதெல்லாம் பப்பா என்னை அன்புடன் அணைத்துக் கொள்வார். நான் சின்னப்பிள்ளையாய் இருந்து பொழுது பப்பாவும், நானும் பந்து எறிந்து விளையாடுவோம், விமானங்கள் செய்து வீசுவோம், மற்றும் எல்லா விளையாட்டுக்களையும் விளையாடுவோம். தான் சாப்பிடும் நேரமெல்லாம் தனது சாப்பாட்டை எனக்கும் தந்து சாப்பிடுவார். அவருக்கு கொட்டோக் மற்றும் யூனிய சிக்கன் என்றால் மிகவும் விருப்பம். எனக்கு எல்லா நேரங்களிலும் உதவியாக இருப்பார். எனது அப்பா வருத்தமாக இருந்த நேரமெல்லாம் என்னை மிகவும் அன்பாகக் கவனித்து வந்தார். பப்பா தனது பகிடிக் கதைகளால் எல்லோரையும் சிரிக்க வைப்பார். அவர் சான்ரா வேசத்தால் எல்லோரையும் மகிழ வைப்பார். கப்பலில் ஜப்பான் பயணம், விமானத்தில் சிங்கப்பூர் பயணம், ஹெலிகாப்டரில் இந்தியா பயணம் என்று சொல்லி சிரிப்பார், சிரிக்க வைப்பார். அவருக்கு எல்லோருடனும் கதைக்கவும், பழகவும் நல்ல விருப்பம். பப்பா எப்பொழுதும் நாங்கள் இறங்குவதற்கு முன் இன்னும் 5 நிமிடம் இருக்குமாறு கேட்பார். நீங்கள் என்னை நல்ல பிள்ளையாக வளர்த்து வட்டதற்கும், நீங்கள் எனக்குச் செய்த எல்லாவற்றிற்கும் மிகுந்த நன்றி பப்பா. உங்கள் அன்பை என்னால் மறக்கவே முடியாது பப்பா. நீங்கள் எப்பொழுதும் எனது கரிசனை, கருணை, தாராளமான, அன்பான பப்பாவாக இருந்தீர்கள். நன்றி பப்பா.
Great to know you Officer and to see you practicing walking using the walker in the hallway, Saw that Almighty had called you. Rest in Peace ! Hearty Condolences to the Family.